இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, March 22, 2011

புதியவர்களுக்கு வாய்ப்பு தமிழக காங். வேட்பாளர்கள்: சோனியா பரிசீலனை

புதியவர்களுக்கு வாய்ப்பு தமிழக காங். வேட்பாளர்கள்: சோனியா பரிசீலனை
சென்னை. மார்ச்.22-
 
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையிலான 20 பேர் கொண்ட மாநில தேர்தல் குழு கடந்த 17-ந் தேதி டிக்கெட் கேட்டவர்களின் விருப்ப மனுக்களை ஆய்வு செய்து ஒவ்வொரு தொகுதிக்கும் 3 முதல் 5 பேர் கொண்ட பரிந்துரை பட்டியலை இறுதி செய்தது.
 
காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவில் இடம்பெற்றுள்ள வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் இந்த பட்டியலை தங்கபாலு வழங்கினார். நால்வரும் வேட்பாளர்களை தேர்வு செய்து பட்டியல் தயாரித்தனர். அதனை லண்டனில் இருந்து டெல்லி திரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் வழங்கினர். அப்பட்டியலில் சோனியாவுக்கு உடன்பாடு இல்லை. அதை நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பழையவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்றும், புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் படியும் அவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பட்டியலில் பெரும்பாலானோர் முன்னாள் எம்.எல்.ஏ.க்களாக இருந்தனர். தங்க பாலு மனைவிக்கும் சீட் கேட்டதாக கூறப்படுகிறது. எனவே புதுப்பட்டியல் தயாரிக்கும்படி சோனியா திருப்பியனுப்பியுள்ளார். இதனால் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
 
புதிய வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விடும் என்று தெரிகிறது. நாளை மாலை வேட்பாளர்களை சோனியா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.