இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, March 21, 2011

புறக்கணிப்பது வருத்தமளிக்கிறது': வைகோவுக்கு ஜெ., கடிதம்

"புறக்கணிப்பது வருத்தமளிக்கிறது': வைகோவுக்கு ஜெ., கடிதம்
 
  


சென்னை : "ம.தி.மு.க., தேர்தலை புறக்கணிக்கும் என்று தாங்கள் அறிவித்து இருப்பது மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

வைகோவுக்கு நேற்று ஜெயலலிதா எழுதிய கடிதம்:அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் தங்களது ம.தி.மு.க., 2006ம் ஆண்டு முதலே அங்கம் வகித்து வருகிறது. நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலைகளையும், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றிருப்பதையும் முதிர்ந்த அரசியல்வாதியான தாங்கள் நன்கு அறிவீர்.இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் தாங்கள் கேட்டுக் கொண்டபடி 21 தொகுதிகள் ஒதுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. தங்கள் கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கித் தருகிறேன் என்பதையும் அ.தி.மு.க., பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமை நிலைய செயலர் செங்கோட்டையன் மூலம் தகவல் சொல்லி அனுப்பி இருந்தேன். அவர்களும் தங்களை நேரில் சந்தித்து இதைத் தெரிவித்தனர்.

இருப்பினும், "ம.தி.மு.க., தேர்தலை புறக்கணிக்கும்' என்று தாங்கள் அறிவித்து இருப்பது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது. தங்களது முடிவு எப்படி இருந்தாலும், உங்களுடைய அன்புச் சகோதரியின் நன்மதிப்பும், அன்பும் உங்கள் மீது எப்போதும் இருக்கும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.