இறைவனின் திருப்பெயரால்....

Pages

Thursday, March 24, 2011

மனிதநேய மக்கள் கட்சி,சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வெற்றி வேட்பாளர் எம். தமிமுன் அன்சாரி


எம்.தமிமுன் அன்சாரி (வயது 34)
1995 முதல் தமுமுகவின் தீவிர தொண்டராக அறிமுகமானார். தமுமுக வின் மாணவரணியை உருவாக்கி அதன் தலைவராக திறம்பட செயல்பட்டார். சென்னை புதுக்கல்லூரியில் பயிலும் போது, 1997&ல் சென்னை புதுக்கல்லூரியின் மாணவர் பேரவை தேர்தலில் போட்டியிட்டு செயலாளராக வெற்றி பெற்றார்.


2001&ல் தமுமுகவின் மாநில செயலாளராக பணி உயர்வு பெற்று செயல்பட்டார். 2009ல் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.


சிறந்த மேடைப் பேச்சாளர், கவிஞர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், நிர்வாகி என பன்முகத்தன்மை கொண்ட இவர் 34 வயதே நிரம்பியவர்.


ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் இயக்கத்தின் சார்பில் பங்கேற்றுள்ளார். இயக்கப்பணியை கட்டமைப்பதில் தீவிர ஆர்வம் கொண்ட இவர் தனது 14 வயதில் பொதுவாழ்வில் ஆர்வம் காட்டினார்.

1990 முதல் பொதுவாழ்வில் ஈடுபடும் இவருக்கு 21 ஆண்டுகால சேவை அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மக்கள் உரிமை வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். சென்னை புதுக்கல்லூரியில் பி.எ.சி.எஸ் இளங்கலை பட்டம் முடித்த இவர், தற்போது சென்னை பல்கலைக்கழக்கத்தில் எம்.ஏ.அரசியல் விஞ்ஞானம் பயின்று வருகிறார்.


இவர் நாகை மாவட்டம் தோப்புதுறையைச் சார்ந்தவர்.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்: சகோ.எம்.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.