சேலம்: சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, அரசியல் கட்சி நிர்வாகிகள், வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு சென்று தேர்தல் நிதி வசூல் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மிரட்டும் கட்சியினரால், வியாபாரிகள் பலர் மிரண்டு ஓடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் ஓட்டுப்பதிவுக்கான முன்னேற்பாட்டு பணிகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. மாவட்ட வாரியாக ஓட்டுச்சாவடி, ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையம், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு புறமிருக்க, தி.மு.க.,- அ.தி.மு.க., - காங்.,- தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி சேர்ப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. முதல் சுற்று, இரண்டாம் சுற்று என பேச்சுவார்த்தை நீடிக்கிறது. தற்போது ஆளும் கட்சியினர் ஆதிக்கம் தான் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ளது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், பணம் செலவழிக்க அஞ்ச வேண்டாம் என கட்சியினருக்கு மறைமுக கட்டளையிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை காட்டிலும், இந்த தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும், 11 இடைத்தேர்தல் அனைத்துமே பணத்தை முன்னிறுத்தியே நடந்தது. வாக்காளர்களுக்கு 1,000, 2,000 ரூபாய் என பணத்தை வாரி இறைத்து வெற்றியை பறித்தனர்.
வரும் சட்டசபை தேர்தல், தி.மு.க.,- அ.தி.மு.க.,வுக்கு வாழ்வா, சாவா நிலையை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., தோல்வியடைய நேரிட்டால், அடுத்து ஆட்சியை பிடிக்கும் வரை பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். கட்சியின் முக்கியப்புள்ளிகள் பலர் மாற்று கட்சியை தேடி ஓடு விடுவர்.இலவசங்களை வாரி இறைத்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளோம் என்பதை தி.மு.க., நிரூபிக்க வேண்டிய முக்கிய கட்டத்தில் உள்ளது.
இதுவரை தனித்துப்போட்டி என வீர முழக்கமிட்ட, தே.மு.தி.க.,வும் இம்முறை கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தெரிகிறது. அக்கட்சியும் வெற்றி பெற்றால் மட்டுமே தொண்டர்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.
லோக்சபா தேர்தலில் பட்ட தோல்வியை, சட்டசபை தேர்தல் மூலம் மீட்க வேண்டும் என்பதில் பா.ம.க., உறுதியாக உள்ளது. தி.மு.க.,வுடன் கூட்டணியில் இணைந்தாலும், 31 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆர்வமாக உள்ளார்.
பணம் ஒன்றே வெற்றியை நிர்ணயிக்கும் என்ற பார்முலாவை, அனைத்து கட்சிகளும் உணர ஆரம்பித்துள்ளன. அதனால், இந்த தேர்தல் வாக்காளர்களுக்கு பணமழை பொழியும் தேர்தலாக இருக்கும். கட்சியில் நிதி இல்லாதவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும், பெரிய வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வியாபாரிகள், தொழிலதிபர்கள் பலர், ஆட்சிக்கு வந்தால் ஆபத்தாகிவிடுமே என்ற அச்சத்தில் கேட்டதை கொடுக்கின்றனர். சிலர் வேண்டா வெறுப்பாக, விதியே என நொந்தபடி கொடுக்கின்றனர். தேர்தல் நிதி வசூலில், ஒவ்வொரு கட்சியில் இருந்தும், அந்தந்த மாவட்டத்தின் முக்கியப்புள்ளிகள், "அடுத்து நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம், பார்த்து செய்' என, மிரட்டல் தோணியில் வசூலை வாரிகுவித்து வருகின்றனர். வேர்வையில் நனைந்த பணம், வீணாக போகிறதே என கடை உரிமையாளர்கள் பலர் தலையில் கைவைத்தபடி இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் தேர்தல் நிதி வசூல் தற்போது கனஜோராக நடந்து வருகிறது. பணம் பத்தும் செய்யும் என்பது, இந்த தேர்தல் மூலம் மக்களுக்கு புரியவரும்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.