ஏமன் பிப்.26-
மத்திய கிழக்கு நாடுகளான துனிசியா, எகிப்து உளிட்ட நாடுகளை தொடர்ந்து ஏமனில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. சென்ற பிப்ரவரி 16 முதல் பேராட்டக்காரர்கள் அதிபர் அலி அப்துல்லா சலேவை பதவியில் வெளியேற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அதிபர் பதவி காலம் வரும் 2013 வரை உள்ளது. அதனால் அவர் பதவியில் இருந்து விலக மறுத்ததுடன் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்தவும் மறுத்த வருகிறார்.
இதனால் 100000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். பேராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் தடுத்தி நிறுத்தி ஒடுக்க முயற்சித்து வருகிறார்கள். பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் 4 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 40பேர் காயமடைந்தனர்.
இந்தப் போராட்டத்தில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் போராட்டக்காரர்கள் பலரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 10,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் தலைநகர் சானாவில் உள்ள சானா பல்கலைக்கழக வளாகத்தில் அதிபரை வெளியேற வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி போராடி வருவதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏமன் அதிபர் அலி அப்துல்லா சாலே 1978 முதல் தொடர்ந்து பதவியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.