இறைவனின் திருப்பெயரால்....

Pages

Thursday, July 22, 2010

குளிர்பானம் அருந்தினால்: குறை பிரசவம் கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை


கர்ப்பிணி பெண்கள், ‘சாப்ட் டிரிங்ஸ்’ என அழைக்கப்படும் குளிர்பானங்களை அடிக்கடி அருந்தினால், குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ள தென, மருத்துவ நிபு ணர்கள் எச்சரித்துள்ளனர்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி, குமட்டல் ஏற்படும். இதற்காக ‘சாப்ட் டிரிங்ஸ்’ எனப்படும் குளிர் பானங்களை பருகும் பழக்கம் கர்ப்பிணிகளிடையே அதிகரித்து வருகிறது. இது கர்ப்பிணிகளுக்கு பல வகையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக, மருத்துவ நிபுண ர்கள் கூறுகின்றனர்.

டில்லி போர்ட்டீஸ் மருத்துவனை நிபுணர் அனூப் மிஸ்ரா கூறிய தாவது:

கர்ப்பிணி பெண்கள் முன் பெல்லாம் எலுமிச்சை பழச்சாறு அல்லது தயிரில் சர்க்கரை (லஸ்ஸி) சேர்த்து அருந்துவர். தற்போது பின் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் அவர்கள் குளிர்பானங்களை அருந்துகின் றனர். இதனால், அவர்களது உடல் நிலை பாதிக்கப்படும்.

குளிர்பானங்களால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து முடிவுகள் எதுவும் இதுவரை வரவில்லை. ஆனால், அதில் சேர்க்கப்படும் சர்க்கரை, பதப்படுத் துவதற்கு சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களால் குறை பிரசவம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அனூப் மிஸ்ரா கூறினார்.

கோகிலபென் அம்பானி மருத்து வமனை நிபுணர் சுசித்ரா பண்டிட் கூறுகையில், ‘சாப்ட் டிரிங்ஸ்களில் ஊட்டச்சத்துகள் ஏதும் இல்லை. அதில், கலக்கப்படும் செயற்கை நிற மூட்டிகள் கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் சுடவைத்து ஆற வைத்த வெந்நீர் அல்லது பழச் சாறு அருந்தலாம்‘ என்றார்.

இது தொடர்பாக அமெரிக்க பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில்:

இனிப்பு சுவை மிக்க குளிர்பா னங்களில் கலக்கப்படும் பொருட் களால், பல பின் விளைவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் குளிர்பானம் அருந்துவதை தவிர்த்து, இயற்கை யான பானங்களை அருந்துவது நல்லது என கூறப்படுகிறது.

இதற்காக டச்சு நாட்டைச் சேர்ந்த, 60 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. கர்ப்ப காலத்திற்கு நடுவில் கர்ப்பிணிகளுக்கு செயற் கை குளிர்பானங்கள் மற்றும் இயற்கை குளிர்பானங்கள் கொடு த்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் செயற்கை குளிர்பானங்கள் அருந்திய பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது. குறை பிரசவத்தால் தாய்க்கும், குழந் தைக்கும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இவ்வாறு ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.