Thursday, July 22, 2010
முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு துபாய் அரசு பாராட்டுச் சான்றிதழ்
Posted by
riyas
at
22.7.10
முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துபாய் மண்டலம் சார்பாக மக்கள் பயன் பெறும் வகையில் இரத்ததான முகாம்கள் பரவலாக பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் அதிகப்படியான நபர்கள் கலந்துக் கொண்டு இரத்தத்தை தானமாக அளித்தமைக்காக துபாய் அரசாங்கமும், துபாய் மருத்துவனைகளின் உயரிய கூட்டமைப்பும் இணைந்து பாராட்டுச் சான்றிதழை வழங்கியது.
ஜூலை 16ம் தேதி துபாயில் முமுக ஏற்பாடு செய்திருந்த முகாமை பார்வையிட்ட மருத்துவக் குழு அதிகாரிகள் அதன் பின் அல் வாசல் மருத்துவனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்சான்றிதழை அமீரக மற்றும் துபாய் நிர்வாகிகளிடம் அளித்தனர்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.