மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் பி. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை:
இந்தியாவின் மிக முக்கிய பிரச்சனையாக மக்களை வாட்டியெடுக்கும் விலைவாசி உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவில் முன்னெடுக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.தவறான பொருளாதார கொள்கைகளாலும், யூகபேர வணிகத்தாலும்தான் விலைவாசி தாறுமாறாக உயர்ந்திருக்கிறது என்பதை மக்களுக்கு எடுத்துக்கூறவும், ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் இந்தப் போராட்டம் தேவைப்படுகிறது.
எனவே எதிர்வரும் 27.04.2010 அன்று நடைபெறவிருக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்களின் நலனைக் கருதி அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.