பிப்&24 அன்று ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி சமர்பித்தார். எதிர்பார்த்தபடியே கவர்ச்சிகரமான பட்ஜெட்டாக இருந்தது. அதில் ஓரிரு குறைகள் தெரிந்தாலும் அது சுமையாக இல்லை.
பிப்&26 அன்று சமர்பிக்கப்பட்ட பொது பட்ஜெட் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட குழப்பங்கள், பட்ஜெட்டின் போக்கை திசைதிருப்பியிருக்கிறது என்பதுதான் உண்மை.
அதில் விலைவாசியை குறைப்பதற்கான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. கடந்த ஈராண்டுகளாக விஷம் போல் ஏறிவரும் விலைவாசியால் ஏழைகளும், நடுத்தர மக்களும் பெரும் துயரத்தில் இருக்கும்போது, பெட்ரோல் 2.94 ரூபாயும், டீசல் 2.80 ரூபாயும் உயரும் வகையில் வரி விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இது அனைத்து பொருள்களின் விலைகளும் மேலும் உயரவே வழிவகுக்கும். மொத்தத்தில் ஏழைகளை மனதில் கொள்ளாத, அவர்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி தந்துள்ளார்.
Thursday, March 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.