இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, August 16, 2015

தமுமுக அதிரை நகர கிளை பொதுக்குழு கூட்டம்

தமுமுக அதிரை நகர கிளை பொதுக்குழு கூட்டம் நேற்று இரவு 7:00 மணியளவில் மரைக்கான் என்கின்ற அப்துல் கபூர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமுமுக அதிரை பேரூர் கழக செயலளார் ஏஆர் சாதிக் பாட்சா தலைமை வகித்து வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் அதிரை அஹமது ஹாஜா, மாவட்ட துணை செயலாளர் மதுக்கூர் ஜபருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக அதிரை பேரூர் நிதி நிலை அறிக்கையை பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி வசித்தார் .கூட்டத்தில் உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டது. கூட்ட முடிவில் தமுமுக அணி பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது, உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, பிலால் நகர் பகுதி கோரிக்கை மற்றும் சிஎம்பி லேன் பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்கள் சரிசெய்ய சம்பந்தப்பட்டோரை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடுத்த தமுமுக பொதுக்குழு கூட்டம் 12 வது வார்டில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்ட முடிவில் தமுமுக அதிரை பேரூர் துணை செயலாளர் கமாலுத்தீன் நன்றி கூறினார். இதில் தமுமுக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்
Rate this posting: 
 0  :   0

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.