அதிரையில் மின்தடையை கண்டித்து த.மு.மு.க சார்பில் சாலை மறியல் போராட்ட அறிவிப்பு !
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அதிரை, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய அலுவலக வட்டத்திலிருந்து தெரிவித்துள்ளதை அடுத்து அதிரை நகர த.மு.மு.க சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில் சாலை மறியல் மற்றும் மின்சார அலுவலகம் முற்றுகை போராட்டத்திற்கு அறிவிப்பு செய்துள்ளனர். இதில் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளுபடி வேண்டுகோளும் விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய வகையில்...
இஸ்லாமிய பண்டிகைகளில் ஒன்றாகிய ஹஜ் பெருநாள் பண்டிகையை நேற்றைய தினம் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிட்டு அதன் தொடர்ச்சியாக இன்று குர்பானி இறைச்சிகளை ஏழை எளியோர்களுக்கு தானமாக வழங்கி வருகின்றனர். இன்றைய தினம் மின்தடை ஏற்படுமானால் இறைச்சிகள் அனைத்தும் பாதுகாப்பதில் சிரமம் ஏற்படும். இதுகுறித்து த.மு.மு.க சார்பாக மின்சார அலுவலர்கள் மற்றும் வருவாய் அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்றுள்ளோம். கவனத்தில் எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளனர் இதில் சுமூகம் ஏற்படுமானால் போராட்டம் கைவிடப்படும். என்றார்.
கடைசிசெய்தி : த.மு.மு.க போராட்ட அறிவிப்பை அடுத்து அதிரை நகரில் இன்று அமல்படுத்த இருந்த மின்தடை விலக்கிகொள்ளப்பட்டுள்ளது. இதில் பெறும்முயற்சி எடுத்து அலுவலக வட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகம் ஏற்பட உதவிய அதிரை நகர காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நகர த.மு.மு.க. சார்பாக நன்றியை தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.