சென்னை, ஜூன்.12-
இந்திய சுயாதீன திருச்சபைகளின் பேராயர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக முதல்- அமைச்சராக 3-வது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுத்தி வரும் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தி வருகின்றனர். ஒருபக்கம் நலத்திட்டங்கள், மறுபக்கத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காக அவர் போராடுகிறார்.
இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்றுக் குவித்த அந்நாட்டு அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் கச்சத்தீவு மீட்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசையும் சேர்க்க வேண்டும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்களை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றிய முதல்-அமைச்சரை பாராட்டுகிறோம்.
உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் அவரை வாழ்த்துகிறது. தமிழக மீனவ மக்களின் ஜீவாதார உரிமைகளில் ஒன்றுதான் கச்சத்தீவு. ஓய்வு எடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும் பிடிபட்ட மீன்களை இனவாரியாக வகைப் படுத்துவதற்கும் தமிழக மீனவர்கள் கச்சத்தீவை பயன்படுத்தி வந்தனர். மீனவ மக்களின் புனிதராக வந்த அந்தோணியாருக்கு ஆண்டுதோறும் இந்த தீவில் எடுக்கப்படும் விழா மிகவும் பிரசத்தி பெற்றது.
கச்சத்தீவை தாரை வார்த்ததின் மூலம் கிறிஸ்தவ மக்களுக்கு பெரும் தீங்கிழைத்து விட்டார் கருணாநிதி. மீனவ மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியேற்றும் விதமாக மீண்டும் கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசின் வருவாய் துறையையும் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து, தமிழக மீனவர்களுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்க வகை செய்யும் வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய சுயாதீன திருச்சபைகளின் சார்பாக வரவேற்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.