இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, June 28, 2011

டெல்லி சென்றார் ஸ்டாலின்- கனிமொழியைச் சந்திக்கிறார்

டெல்லி: 2ஜி விவகாரத்தில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் தனது சகோதரி கனிமொழியைக் காண திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் டெல்லி வந்தார்.


2ஜ விவகாரத்தில் கனிமொழி எம்.பி.யும், கலைஞர் டிவி இயக்குனர் சரத் குமாரும் கைது செய்யப்பட்டு கடந்த 1 மாதமாக திகார் சிறையில் உள்ளனர். கருணாநிதி இரண்டு முறை திகார் சிறையில் கனிமொழியை சந்தித்தார். இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று விமானம் மூலம் டெல்லி புறபட்டுச் சென்றார்.

அவர் திகார் சிறைக்கு சென்று கனிமொழியை சந்திக்கவிருக்கிறார். முன்னதாக அவர் கடந்த மே மாதம் 24-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வைத்து கனிமொழியை சந்தித்தார். தற்போது 2வது முறையாக தங்ககையைச் சந்திக்கிறார் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளைப் பார்த்துவிட்டு வந்த கருணாநிதி கனிமொழி சிறையில் உடல் வீக்கத்தாலும், கொப்பளங்களாலும் கஷ்டப்படுவதாகத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.