பொள்ளாச்சி: "இலவச காப்பீட்டு திட்டம், வரும் ஜூலை 5ம் தேதியோடு ரத்து செய்யப்படுகிறது' என, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம், மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட வெப்சைட், சாப்ட்வேர் மற்றும் பயனாளிகள் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்கும்படி, ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்காலத்தில், "கலைஞர் காப்பீட்டு திட்டம்' என்ற பெயரில், உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டம் துவங்கப்பட்டது. 2009ம் ஆண்டு ஜூலை முதல், திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருவாய் கொண்ட அனைவரும் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு போட்டோ எடுத்து அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. பயனாளிகள், ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதற்கென, மொத்தம் 650 மருத்துவமனைகளை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் அங்கீகரித்திருந்தது. திட்டத்திற்காக ஆண்டுக்கு 720 கோடி ரூபாய், அரசு வழங்கியுள்ளது. இதுவரை, அறுவை சிகிச்சை செய்து கொண்ட 3.5 லட்சம் பேர், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். எனினும், இத்திட்டத்தில் குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற மாநில அரசு, கலைஞர் காப்பீட்டு திட்டம் முழுமையான காப்பீடு திட்டமாக இல்லாததை சுட்டிக்காட்டியும், பயனாளிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக கூறியும், திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது; மக்கள் பயன்பெரும் வகையில் மேம்படுத்தப்பட்ட புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்யவும் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, சட்டசபையில் தமிழக கவர்னர் உரையில் வெளியிடப்பட்டது. அதையடுத்து, கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அரசாணையின் தொடர்ச்சியாக, அரசு சிறப்பு செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை திட்ட இயக்குனர் விஜயகுமார், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜெகநாதனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்படுகிறது. எனவே, திட்டத்திற்காக ஒப்படைக்கப்பட்ட நிதியில் மீதமுள்ள தொகையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். மேலும், திட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட வெப்சைட், பயனாளிகள் பட்டியல், சாப்ட்வேர் உள்ளிட்டவற்றையும் ஒப்படைக்க வேண்டும்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சிறப்பு செயலர் நோட்டீஸ் அறிவிப்பை தொடர்ந்து, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சுந்தரேசன், காப்பீட்டு திட்ட அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், "அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு சிறப்பு செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார். அதனால், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் மருத்துவமனை செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் ரத்து செய்யப்படுகிறது. வரும் ஜூலை 5ம் தேதி நள்ளிரவுக்கு பிறகு இந்த திட்டம் ரத்தாகிறது. மருத்துவமனைகளில், வரும் ஜூலை 5ம் தேதிக்கு பிறகு இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்காது. அதுவரை மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து அதற்கான தொகையை பெற்றுக்கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., அரசு, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் என்னென்ன மேம்பாடுகள் செய்யும், எப்போது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிவிக்கும், எந்த காப்பீட்டு நிறுவனத்திடம் இந்த திட்டத்தை ஒப்படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லாரிடமும் ஏற்பட்டுள்ளது.
செயல்பாடு எளிமையாகும்: அ.தி.மு.க., அரசு, புதிய காப்பீட்டு திட்டத்தை விரைவில் துவங்கவும் முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள காப்பீட்டு திட்டத்திற்கான வெப்சைட், சாப்ட்வேர் போன்றவற்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. புதிதாக எந்த காப்பீட்டு நிறுவனத்திடமும் இந்த திட்டத்தை ஒப்படைத்தால், புதிதாக சாப்ட்வேர், வெப்சைட் அமைக்க காலதாமதம் ஏற்படும். பயனாளிகள் பட்டியல் தயாரிக்கவும் கால விரயம் ஏற்படும். தற்போதுள்ள திட்ட செயல்பாடு பற்றிய விவரம், பயனாளிகள் பட்டியலை பெற்று, புதிதாக ஒப்பந்தம் செய்யப்படும் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தால் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முடியும். அதற்கு வசதியாகவே, பட்டியல், சாப்ட்வேர் ஆகியவற்றை ஒப்படைக்கும்படியும் அரசு உத்தரவிட்டுள்ளது.

0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.