தமிழகத்தில் மின்பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக, 1,200 மெகாவாட் மின்சாரத்தை, தனியாரிடம் விலைக்கு வாங்க, "டெண்டர்' அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், வரும் அக்டோபர் மற்றும் அடுத்த கோடைக்கு முந்தைய பற்றாக்குறையை சமாளிக்க, 1,200 மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் வாங்க மின்வாரியம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கு 500 மெகாவாட்டும், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல், மே வரை 700 மெகாவாட்டும் மின்சாரம் சப்ளை செய்ய விரும்பும், தனியார் மின் உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின் படி, குறைந்த விலைக்கு தர விரும்புவோரிடம் ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் டெண்டர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு, தற்போதைய நிலையில், 11 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், 7,500 முதல் 8,500 மெகாவாட் வரை தற்போது கிடைத்து வருகிறது. மத்திய அரசிடமிருந்து 2,290 மெகாவாட், காற்றாலைகளிலிருந்து 2,500 முதல் 2,800 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதுதவிர, பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் மூலம், தனியாரிடம் 700 மெகாவாட் மின்சாரமும் பெறப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடை காலத்தில், 500 மெகாவாட் மின்சாரம் சப்ளை செய்ய தனியாரிடம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின்துறை வணிகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த ஆண்டு பற்றாக்குறையை தீர்க்க, ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் 500 மெகாவாட் மின்சாரம், குறைந்த விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், தற்போது 330 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது; ஜூலை முதல் 500 மெகாவாட்டாக கிடைக்கும். ஆனால், வல்லூர் அனல்மின் நிலைய திட்டத்திற்காக சென்னை, நெல்லூர் பாதையில் மின்தட இணைப்பு பணிகள் நடப்பதால், ஆந்திராவிலிருந்து வரும், 330 மெகாவாட் மின்சாரத்தை தற்போது பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான், சென்னைக்கு கூடுதலாக ஒரு மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.