சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மக்களவை இரங்கல்
புதுதில்லி, மார்ச்.14: ஜப்பானை கடந்த வெள்ளிக்கிழமை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மக்களவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இந்த பேரழிவில் சொத்துக்களை இழந்தவர்களுக்கும், உயிர்களை இழந்தவர்களுக்கும் அவை இரங்கல் தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் மீராகுமார் தெரிவித்தார்.அதன்பிறகு உயிரிழந்தவர்களுக்காக சிறிதுநேரம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி ஏற்பட்டு வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்டவற்றை கடலுக்குள் இழுத்துச் சென்றது. ஆயிரக்கணக்கான மக்களும் இதில் உயிரிழந்தனர்.இதனிடையே சுனாமி தாக்கிய ஜப்பானில் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.அங்குள்ள தூதரிடம் பேசினேன். ஜப்பானில் 25 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாகவும், பெரும்பாலும் டோக்கியோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் அவர்கள் பாதுகாப்புடன் உள்ளதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். இந்திய சமூகத்தினருடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார் என எஸ்.எம்.கிருஷ்ணா நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்தியர்களுக்கு உதவ என்ன செய்ய முடியுமோ அதை தூதரகம் செய்யும். ஹெல்ப்லைன் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. உதவிக்காக இந்திய தூதரகத்தை அவர்கள் அணுகலாம் என கிருஷ்ணா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.