கலைஞர் டிவி. நிர்வாக இயக்குநரிடம் சிபிஐ விசாரணை
புதுதில்லி, மார்ச் 14- 2ஜி விவகாரத்தில், கலைஞர் டி.வி.,யின் நிர்வாக இயக்குநர் சரத் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று தில்லியில் விசாரணை நடத்தினர்.முன்னதாக, சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வருமாறு அவருக்கு தகவல் தரப்பட்டிருந்தது. இதையடுத்து, இன்று காலை 11 மணிக்கு அவர் ஆஜரானார்.சினியுக் நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி.,க்கு ரூ. 214 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னையில், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரிடம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தற்போது சரத் குமாரிடம் மூன்றாவது முறையாக சிபிஐ விசாரித்துள்ளது. கலைஞர் டி.வி. 20 சதவீத பங்குகள் சரத் குமாரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.சினியுக் நிறுவனத்திடம் இருந்து ரூ. 214 கோடி கடன் பெற்றதாகவும், அத்தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டதாகவும் கலைஞர் டி.வி. நிர்வாகம் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.