இறைவனின் திருப்பெயரால்....

Pages

Thursday, March 17, 2011

இலவச திட்டங்களால் ஓட்டு விழும் என்று நம்பி கிராமப்புற தொகுதிகளை தேடும் தி.மு.க., புள்ளிகள்

இலவச திட்டங்களால் ஓட்டு விழும் என்று நம்பி கிராமப்புற தொகுதிகளை தேடும் தி.மு.க., புள்ளிகள்


election 2011 இலவச திட்டங்களால் ஓட்டு விழும் என்று நம்பி கிராமப்புற தொகுதிகளை தேடும் தி.மு.க., புள்ளிகள்
A+  A-
சென்னை : தி.மு.க.,வின் பெரும்பாலான அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் தொகுதி மாறுவர் எனத் தெரிகிறது. தொகுதி சீரமைப்பால், ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகள் நீக்கப்பட்டதாலும், புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு தொகுதியின் பரப்பு மாற்றப்பட்டு உள்ளதாலும், தொகுதி மாறுவதில் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் தீவிரம் காட்டுகின்றனர்.

கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதிக்கு தேவைப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் சிரத்தையில்லாமல் இருந்ததால், தொகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் தொகுதி மாறுகின்றனர்.கட்சியில் புது ரத்தத்தைப் புகுத்த, இளைஞர்களை களம் இறக்கவும் தி.மு.க., தலைமை விரும்புகிறது. சிபாரிசுகளைத் தவிர்த்து கட்சிக்காக உழைக்க விருப்பம் உள்ளவர்களையே தேர்வு செய்ய தி.மு.க., அக்கறை காட்டுகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில், நகர்ப்புறங்களில் தி.மு.க.,வின் ஓட்டு வங்கியில் சரிவு ஏற்பட்டு, கிராமப்புறங்களில் கணிசமாக உயர்ந்துள்ளது என கணிக்கப்படுகிறது. இதனால், பல ஆண்டுகளாக தி.மு.க.,வின் கோட்டைகளாகக் கருதப்பட்ட நகர்ப்புற தொகுதிகளைவிட்டு, கிராமப்புற தொகுதிகளை நோக்கி தி.மு.க.,வின் முக்கியத் தலைகள் இடம் பெயருகின்றன.
அரசின் இலவசத் திட்டங்கள் கைகொடுக்கும் என நம்பி, கிராமப்புறத் தொகுதிகளை தி.மு.க.,வின் முக்கியப் புள்ளிகள் விரும்புகின்றனர்.

காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்த தொகுதிகளால், தொகுதிகளை இழந்த அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், செல்வராஜ், இளித்துறை ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர், அருகில் உள்ள தொகுதிகளுக்கு இடம் மாறுகின்றனர்.சில மூத்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் தங்களது வாரிசுகளுக்கு சீட் கேட்கின்றனர். வீட்டு வசதித் துறை அமைச்சர் சுப.தங்கவேலன் தன் மகன் சுப.த.சம்பத்துக்கு வாய்ப்பு கேட்கிறார்.துணை முதல்வர் ஸ்டாலின், ஆயிரம்விளக்குத் தொகுதியிலிருந்து கொளத்தூர் தொகுதிக்குச் செல்கிறார்.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர் பூங்கோதைக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்படாது எனத் தெரிகிறது. இவருக்குப் பதில், இவரது தம்பிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நில ஆக்கிரமிப்பு சர்ச்சையில் சிக்கி, விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, ஈரோடு தொகுதியிலிருந்து அந்தியூர் தொகுதிக்கு இடம் மாறுகிறார்.நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், வெள்ளகோவில் தொகுதியிலிருந்து மடத்துக்குளம் தொகுதிக்கு மாறுகிறார். பல்வேறு புகார்களுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் கே.பி.பி.சாமிக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்படும் எனத் தெரிகிறது. இவரது, சகோதரர் மீது கூறப்படும் புகார்களும் வாய்ப்பு மறுக்கப்படுவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.