ஆணவப்போக்குடன் அ.தி.மு.க., பிடிவாதம்; கூட்டணியில் இருந்து வெளியேறியது ம.தி.மு.க.,
தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும் அ.தி.மு.க, தலைமையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அவசர, அவசரமாக , கூட்டணி கட்சி தலைவர்களை ஜெ., சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து பார்வர்டுபிளாக் கட்சி, மனிதயேமக்கள் கட்சி, புதிய தமிழகம், இ.கம்யூ., மார்க்., கம்யூ என அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் ,சமத்துவ மக்கள் கட்சி, என அனைத்து கட்சிகளுக்கும் கேட்டபடி தொகுதிகளை ஒதுக்குவதாக ஜெ., சம்மதம் தெரிவித்து ஒப்பந்தமும் முடிவு செய்யப்பட்டடது. 2 நாளாக தொடர்ந்து நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தே.மு.தி.க.,விற்கு தொகுதி ஒதுக்கீடு பிரச்னை முடிவுக்கு வந்தது.இதனை இன்னும் விஜயகாந்த் உறுதி செய்யவில்லை. இவரது ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இக்கட்சியின் அவைத்தலைவர் பன்ருட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில் நீண்ட கால நண்பராக இருக்கும் ம.தி.மு.க.,வை மதிக்கவில்லை, இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் ஜெ., சுணக்கம் காட்டுகிறார் என்றும் இது தொடர்பாக ம.தி.மு.க., உயர்நிலை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ம.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதன்படி நேற்று காலை தாயகத்தில் உயர்நிலை கூட்டம் கூடி விவாதித்தனர். .மாலையில் மாவட்ட செயலர்களுடன் 2 முறை வைகோ கலந்து பேசினார்.முன்னதாக அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் அவசரமாக வைகோவை சந்தித்து பேசினர்.
இந்த பேச்சில் 13 தொகுதிகளும் வரும் காலத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் தருவோம் என்று தெரிவித்தனர். ஆனால் வைகோ 16 சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு தருமாறு கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து இது குறித்த விவரத்தை ஜெ,. யிடம் எடுத்து சொல்ல அ.தி.மு.க,. நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்றனர். ஆனால் இதனையடுத்து பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர்
தமிழகம் மற்றும் புதுவையில் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வைகோ கூறியுள்ளார். இது தெடர்பாக அவர் மேலும் கூறுகையில்,தொகுதி பங்கீட்டு முறையில் அ.தி.மு.க., நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை. அ.தி.மு.க.,வின் ஆணவப்போக்கு தங்களை கடுமையாக காயப்படுத்தி விட்டதாகவும், சுயமரியாதை இழந்து பதவிகளை பெறற வேண்டிய அவசியம் இல்லை. 3வது அணி அமைத்து தேர்தலில் போட்டியிடவும் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.