திருச்சி பிரசாரத்தில் நாளை அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிடுகிறார்
திருச்சி, மார்ச்.23-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நாளை காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதன்பிறகு 11.30 மணிக்கு ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து ஸ்ரீரங்கம் பகுதிகளில் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து 25, 26 ஆகிய 3 நாட்கள் திருச்சியில் தங்கியிருந்து திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
26-ந்தேதி கந்தர்வ கோட்டை, தஞ்சையில் பிரசாரம் செய்கிறார். திருச்சியில் நாளை பிரசாரம் தொடங்கும் போது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிடுகிறார். முன்னதாக ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து சாமி பாதத்தில் தேர்தல் அறிக்கையை வைத்து வழிபடுகிறார். ஜெயலலிதா திருச்சியில் தங்கும் சங்கம் ஓட்டலில் பிரசார வாகனங்கள் டெம்போவேன், ஜீப் பாதுகாப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தொடர்ந்து ஜெயலலிதா தஞ்சை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திருப்பூர், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, சென்னை என ஏப்ரல் 11-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். தி.மு.க. இந்த தேர்தலிலும் பல இலவச திட்டங்களை அறிவித்துள்ளது. இதற்கு போட்டியாக ஜெயலலிதா பரபரப்பான இலவச திட்டங்களை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.