அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு,மார்க்சிஸ்டு கட்சிகளுக்கு தொகுதி ஓதுக்கீடு
சென்னை, மார்ச். 14-
தமிழக சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க.,மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், அகில இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகள் இடம் பெற்று உள்ளன.
இதில் தே.மு.தி.க. விற்கு 41 தொகுதியும், சிறு கட்சிகளுக்கு 12 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது வரை கூட்டணி கட்சிகளுக்கு 53 தொகுதிகள் அ.தி.மு.க. வழங்கியுள்ளது. மீதமுள்ள ம.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நிடித்து வந்தது.
இந் நிலையில் இன்று அ.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் இடையே இன்று மதியம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடைப்பெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 10 இடங்களும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 12 இடங்களும் ஒதுக்கப்பட்டது. இன்னும் அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்று அறிவிக்கப்பட வில்லை.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.