இறைவனின் திருப்பெயரால்....

Pages

Wednesday, March 2, 2011

செந்தூர் எக்ஸ்பிரஸ் தினமும் இயக்கப்படும் மனிதநேய மக்கள் கட்சி போராட்டத்திற்கு வெற்றி

செந்தூர் எக்ஸ்பிரஸ் தினமும் இயக்கப்படும் மனிதநேய மக்கள் கட்சி போராட்டத்திற்கு வெற்றி


சென்னைக்கும் திருச்செந்தூருக்கும் இடையில் வாரமிருமுறை ஓடிக்கொண்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கடந்த ஆகஸ்ட் 4, 2010 அன்று காயல்பட்டினத்தில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தியது.
இதற்கு யாதவர் சங்கம், நாடார் சங்கம், வணிகர் சங்கம், வழக்கறிஞர் சங்கம் ஆகியன ஆதரவு தந்து போராட்டத்தில் பங்கேற்றன. மமக துணை பொதுச் செயலாளர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கைதாயினர்.

இந்த கவனஈர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து ரயில்வே உயர் அதிகாரிகளிடமும் மனு கொடுக்கப்பட்டது. மமக தலைமையகம் மூலம் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் தொடர்ந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. எதிர்வரும் பட்ஜெட்டில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயில்£க மாற்ற வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டது
.
மமக ஏற்படுத்திய கவன ஈர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து மற்ற பல பொதுநல அமைப்புகளும் ஆர்வம் காட்டின. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி மம்தா பானர்ஜி அவர்கள் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இச்செய்தி வெளியானதும் தூத்துக்குடி மாவட்ட தலைவர்களுக்கும், காயல்பட்டின நகர மமக நிர்வாகிகளுக்கும் பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த தலைவர்களும், வணிகர்களும், வழக்கறிஞர்களும் தங்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தொலைபேசியில் பகிர்ந்துகொண்டார்கள்.

ம.ம.கவின் ரயில் மறியல் போரை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.