இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, February 22, 2011

இன்று ஒரு திருக்குர்ஆன் வசனம் - அல் குர்ஆன்(2:160) தமிழ் மொழிபெயர்ப்பு இன்று ,ஒரு ஹதீஸ் - முஸ்லிம்: 747

எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
 
English Translation
But those who repent and reform and proclaim (the truth), are forgiven, for I am forgiving and merciful.
 
இன்று ஒரு ஹதீஸ் - முஸ்லிம்: 747
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்னர், "ஸுப்ஹானக, வபி ஹம்திக, அஸ்தஃக்ஃபிருக, வ அதூபு இலைக்க. (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னிடத்தில் பாவமன்னிப்புக்கோரி உன்னிடமே மீளுகிறேன்)" என்று அதிகமாகக் கூறிவந்தார்கள். (ஒரு நாள்) நான், "அல்லாஹ்வின் தூதரே! புதிதாக இந்தச் சொற்களைக் கூறுபவராக நான் தங்களைக் காண்கிறேன். அதன் காரணம் யாது?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது (என்று தொடங்கும் 110ஆவது) அத்தியாயத்தில் என் சமுதாயத்தார் விஷயத்தில் எனக்கோர் அடையாளம் கூறப்பட்டுள்ளது. அதை நான் காண்பதால் இவற்றைக் கூறிவருகிறேன்" எனச் சொல்லி, அந்த அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)
 

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.