இறைவனின் திருப்பெயரால்....

Pages

Saturday, January 22, 2011

தீவிரவாதி யார்?

தொடரும் குண்டு வெடிப்புகள்!

பிப்ரவரி 2002, குஜராத் இன படுகொலை - குஜராத் இன படுகொலையில் முஸ்லிம்களை கொன்று குவிக்க தேவையான‌ துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள், ஆகியவை தனது துப்பாக்கி தொழிற்ச்சாலையில்தான் தயாரிக்கப்பட்டது என தெஹல்கா வீடியோ முன்பு ப.ஜ.க எம்.எல்.ஏ ஹரேஷ் பட் வாக்குமூலம்.

ஏப்ரல் 6, 2006, நந்திக் குண்டு வெடிப்பு - மஹாராஷ்டிரா மாநிலம் நந்தித்தில் குண்டு தயாரித்து கொண்டிருந்த போது ஹிமான்ஷீ பான்சே, நரேஷ் ராஜ்கொண்டுவார், ஆகிய 2 பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் வெடித்துச்சிதறி பலியானார்கள்.பஜ்ரங்தளைச் சேர்ந்த பலர் கைது.


செப்டம்பர் 8, 2006 -‍ மாலேகான் குண்டு வெடிப்பு 1: வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின்போது பள்ளி வாசலில் குண்டு வைத்தனர் பஜ்ரங்தள் பயங்கரவாதிகள். குண்டு வெடிப்பில் போலி தாடியுடன் பஜ்ரங்தள் தீவிரவாதியின் சடலம் மீட்பு.


பிப்ரவரி 10, 2007 -‍ நந்தித் குண்டு வெடிப்பு 2: மீண்டும் நந்தித்தில் குண்டு தயாரித்துக்கொண்டிருக்கும்போது அமில் கந்த்வார் என்ற பஜ்ரங்தள் தீவிரவாதி வெடித்துச்சிதறி பலியானான். மாணிக்ராவ் என்ற தீவிரவாதி கைதானான்.

ஜனவரி 24, 2008 தென்காசி : ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் மற்றும் பஸ் ஸ்டாண்டு குண்டுவெடிப்பு - தென்காசி பஸ் ஸ்டாண்டிலும், ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்த ரவி பாண்டியன், குமார் என்ற கே.டி.சி குமார், நாராயணமூர்த்தி, முருகன், வேல்முருகன், பாலமுருகன், மாசானம் என்ற மகேஷ், சிவா என்ற சிவானந்தம், ஆகிய ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னனி பயங்கரவாதிகள் கைது. நந்தித்தில் வெடுகுண்டு தயாரித்தது போன்றே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், ரவி பாண்டியனின் கேபில் டிவி அலுவலகத்திலும் வெடிகுண்டு தயாரிப்பு நடத்தியது காவல்துறையால் கண்டு பிடிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் முன்பு முஸ்லிம்கள் அணிவது போன்று குல்லாக்களை விட்டுச்சென்று வழக்கை திசைத்திருப்ப நடந்த முயற்ச்சி முறியடிப்பு.


மே 31, 2008 ‍ தானே குண்டு வெடிப்பு: மஹாரஷ்டிரா மாநிலம் தானேயில் விஷ்னுதாஸ் பாவே ஆடிட்டோரியம், கத்காரி ரங்யாதன் ஆடிட்டோரியம், மும்பை வினோபாவெ தியேட்டர் ஆகிய இடங்களில் குண்டு வெடித்தது. ஹிந்து ஜனஜக்ருதி சமிதி மற்றும் சனாதன் சான்ஸ்தா ஆகிய இந்துத்துவ தீவிரவாத இயக்கங்களைச்சேர்ந்த மாங்கேஷ் டிங்கர் நிகாம், ரமேஷ் ஹனுமனி கத்தாரி, சந்தோஷ் ஆங்ரே, விக்ரம் பாவே, ஹரிபாவே தேவ்கர், ஹேமந்த் சால்கே ஆகியோர் கைது.


நவம்பர் 10, 2008, கண்ணூர் குண்டு வெடிப்பு: கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், செருவாஞ்சேரியில் குண்டு தாயாரித்துக்கொண்டிருந்த திலீபன், பார்த்திபன் ஆகிய 2 ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் வெடித்துச் சிதறி பலியாகினர்.


தானே குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் நாள் மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகானிலும், குஜராத் மாநிலம் மொடாஸாவிலும் குண்டு வெடித்தது. இந்த 2 குண்டு வெடிப்புகளுமே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடைபெற்றது என்பதும், முஸ்லிம்கள் நோன்பிருக்கும் புனித ரமழான் மாதத்தில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த குண்டு வெடிப்பில் இந்து ஜாக்ரன் மஞ்ச் (HJM) உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்கோர், சமீர் குல்கர்னி, அஜய் ஏக்நாத் ராய்க்கர், ராஜேஷ் தத்தாத்ரேயா தாவ்டே, ஜக்தீஷ் சிண்டாமன் மாத்ரே, மடாதிபதி மகந்த் தயானந்த் பாண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரக்யா சிங் தாகோர் ஆர்.எஸ்.எஸ் இன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யாத் பரிஷத்தின் (ABVP) முன்னால் செயற்க்குழு உறுப்பினராகவும், வி.ஹெச்.பியின் பெண்கள் பிரிவான துர்கா வாகினியின் தற்போதைய‌ உறுப்பினராக உள்ளார் என்பதும், சமீர் குல்கர்னி ஏ.பி.வி.பி யின் உறுப்பினராகவும் ஃபாசிசத்தின் இந்தியப் பிதாமகன் வீர் சாவர்க்கர் உருவாக்கிய அபிநவ் பாரத் என்ற அமைப்பிலும் உறப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பஜ்ரங்தள் மற்றும் சங்கபரிவார தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு பயிற்சியளித்தது நமது ராணுவ அதிகாரிகள் என்ற உண்மையும் தற்போது வெளியாகியுள்ளது. ஆம்! உண்மையிலேயே இது ஒரு தேசபக்தி சேவைதான்.

மேலும் இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இந்திய ராணுவ‌ உளவுப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி ரமேஷ் உபாத்யா, மற்றொரு ராணுவ அதிகாரி மேஜர் பிரபாகர் குல்கர்னி, இராணுவத்தின் உயர் பதிவியில் உள்ள லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித், ஓய்வு பெற்ற கர்னல் எஸ்.எஸ் ராய்க்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கைதுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பணியிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் ஆர்.எஸ்.எஸ் ‍ல் உள்ள மற்ற‌ ராணுவ சகாக்களும்தான் சங்பரிவார்களுக்கு வெடிகுண்டு தாயாரிக்க பயிற்சியளித்துள்ளனர்.

இவ்வாறு 115 பஜ்ரங்தள் உறுப்பினர்களுக்கு வெடிகுண்டு தாயரிக்க‌ பயிற்சியளித்ததாக புனேயில் உள்ள‌ கடற்படை கேப்டன் சனத் குமார் மித்தல் பாத்தே ATS என்ற தீவிரவாத தடுப்பு போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த 115பேரில் இருவர்தான் நந்தித் குண்டு தயாரிக்கும்போது பலியாகினர் என்று நந்தித் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய சாட்சியான பாத்தே குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகர் குல்கர்னீ நாசிக்கில் போன்ஸாலா மிலிட்டரி பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இவர் சங்கபரிவார சாணக்கியர் என்று வர்ணிக்கப்படுகிறார். பா.ஜ.க வுடைய முன்னாள் இராணுவத்தினர் குழுவிற்கு தலைவராக இருந்துள்ளார். இவர் நடத்தும் போன்ஸாலா மிலிட்டரி ஸ்கூல் என்ற தனியார் இராணுவ பள்ளி ஹிந்து மிலிட்டரி எஜுகேஷன் சொஸைட்டியால் நிர்வகிக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

குண்டு வெடிப்பு என்பது இந்துத்துவத்தின் திட்டம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும், இந்துத்துவ ஃபாசிஸத்தின் பயங்கரவாத சதிச்செயல்கள் நீண்ட வரலாற்று பின்புலம் கொண்டவை. ஆம்! 1934ம் ஆண்டே வெடிகுண்டு வீசி காந்தியை கொலை செய்ய முயன்றார்கள். ஆர்.எஸ்.எஸ்ன் பயங்கரவாதிகள். இதில் காந்தி தப்பவே 1948ம் ஆண்டு ஜனவரி 20ம் நாள் மீண்டும் வெடுகுண்டு வீசி காந்தியை கொல்ல முயன்றார்கள். இதிலும் காந்தி தப்பினார். மதன்லான் பேஷ்வா உட்பட பல ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் இதில் கைது செய்யப்பட்டனர். இறுதியாக 1948 ஜனவரி 30ம் நாள் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி தனது கையில் இஸ்மாயீல் என பச்சை குத்திக்கொண்டு காந்தியை சுட்டுக்கொன்றான். இதன் மூலம் முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி சங்பர்வார்கள் போடப்பட்ட திட்டம் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு மற்றும் இந்திய முன்னாள் பிதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோரால் தவிடுபொடியாக்கப்பட்டது.

முன்பெல்லாம் கோயில்களில் குண்டு வைத்துவிட்டு முஸ்லிம்களின் மீது பழிபோட்டு வந்தனர் சங்கபரிவார பயங்கரவாதிகள். சமீபகாலமாக இந்த நிலை மாறி பள்ளிவாசல்களிலும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் குண்டுவெடிப்புகளை நடத்தி அதில் முஸ்லிம்களையும் அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றுவிட்டு வெடிகுண்டு பழியையும் முஸ்லிம்கள் மீதே போடுவது என்பதுதான் இந்த சங்கபரிவார்களின் 21ம் நூற்றாண்டிற்கான் புதிய திட்டம் என்பது தெளிவாகி வருகிறது.

வெளியே தெரிந்த குண்டுவெடிப்புகள் இவை. உண்மைகள் வெளிவராமல் இவர்கள் நடத்திய குண்டு வெடிப்புகள் இந்த நாட்டில் ஏராளமாகவும் தாராளமாகவும் இருக்கலாம். அதனால்தான் கடந்த 15 ஆண்டுகளாக நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளைப்பற்றிய உண்மைகள் வெளிவர வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விரும்புகின்றது.

எனவே தான் நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை ஆர்வளர்கள் ஆகியோர் அடங்கிய சுதந்திரமாக செயல்படக்கூடிய ஓர் விசாரனை குழவை அமைத்து 1993ம் ஆண்டுக்கு பின்பு நாட்டில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் பாரபட்சமில்லாத நீதி விசாரனைக்கு உட்படுத்தி, உண்மையை வெள்ளை அறிக்கையாக மக்கள் மன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுகின்றது.



ஒன்றுபடுவோம்! முறியடிப்போம்! வலிமிபெறுவோம்!

இந்து, முஸ்லிம், கிறுஸ்த்தவர் மற்றும் அனைத்து சமூக மக்களும் ஒன்றுபடுவோம்!


ஃபாசிஸ பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடிபோம்!

வேற்றுமையில் ஒற்றுமை பேணுவோம்!

நம் தேசத்தை வலிமைபடுத்துவோம்!

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.