
ஆஹா!இதோ பார்!சூப்பர் ஃபிகர்!ஸ்டில்போடப்பாஎன்றுஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட்பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார்.
ஏ இது யாரப்பா?இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலாஇருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!
தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோகாட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரிஉரையாடல்களும்
கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும்.இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா?
சாதிசமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்றகோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகிதங்கியிருக்கும்
அரபு நாட்டின் அறைகளில் தான்.
(அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும்எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக்கொள்ளக் கூடாது.
மார்க்கப் பணிகளுக்காகவும்,மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே
தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும்சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள்.
இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில்நடக்காமல் இல்லை.
வீடியோவில் பெண்கள் போஸ்கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக்காட்டுவதே
இக்கட்டுரையின் நோக்கம்)
ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காகமாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்குநிகழ்ந்தவை?
எல்லாம் நம் வீட்டுத் திருமணத்தில்எடுக்கப்பட்ட வீடியோ தான்.
நம் வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களைகட்டிநிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா?
என்றுகேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும்அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.
வீதியில் உலாவரும் வீடியோ கேமரா
கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முத ல்காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல்அல்லது தர்ஹா
மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்றபுராதனச் சின்னங்கள் தான். இதன் பின் காலையில்கல்யாண வீட்டுக்குள் கேமரா
நுழைந்து டீ காப்பி சப்ளை,டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்றுமணமகனும் மணமகளும் மணவறையில்
நுழைகின்றவரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கிவிட்டுத் தான் வெளியேறும்.
மணமகன் இல்லத்தி ருந்து துவங்கி, வீதி வீதியாகச்சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லதுமண்டபத்திற்குச்
சென்று திருமண ஒப்பந்தம் முடியும்வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்தக் கேமரா, பெண்கள் விருந்து பரிமாறும்போது,
அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத்தவறுவதில்லை. அதாவது அங்கிங்கு அசைந்து,
வந்தவிருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும்பெண்களை கேமராமேன் குறி தவறாது பார்த்துக்கொண்டிருக்கின்றான்.
பற்றாக்குறைக்கு அவனுக்குப்பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள்வேறு!
வேலை செய்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தமாக ஆடைவிலகல் நடைபெறத் தான் செய்யும்.
ஆனால்இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றனஎன்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.
திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முத ல்கேமரா மேன்களின் பார்வைகளுக்கு செழிக்க செழிக்கவிருந்தாகின்றனர்.
அதன் பின்னர் துவக்கத்தில் நாம் கூறியது போல்அறைகளில் பலரும் உட்கார்ந்து கிரிக்கெட்கமென்டரியைப் போன்ற
வர்ணனையுடன் ரசித்துப்பார்க்கும் ஆடவர்களின் பார்வைக்கு இப்பெண்கள்விருந்தாகின்றனர்.
இவ்வாறு பார்வைகளில் படரவும்தொடரவும் இந்த வீடியோப் பதிவுகள் வகைசெய்கின்றன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருமணம் செய்துகொள்ளப் போகும் மணமகன் கூட பெண்ணைப்பார்த்திருக்க மாட்டான்.
அதற்கு முன்பாகவேகேமராமேன் மணப்பெண்ணை ரசித்துப் பார்த்துவிடுகின்றான்.
பவுடர் பூசி, நகைகள் அணிந்து, வண்ணஆடைகளுடன் முழு நிலவைப் போல் அமரவைக்கப்பட்டிருக்கும்
இந்த மணப்பெண்ணை நோக்கித்தான் கேமரா நிலைகுத்தி நிற்கின்றது.
இப்படி மணப்பெண் முதற்கொண்டு, நமது மனைவி,மக்கள், சகோதரிகள், கொழுந்தியாக்கள் என்று
அனைவர்மீதும் பாயும் கேமராவைப் போன்றே
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.