இறைவனின் திருப்பெயரால்....

Pages

Thursday, June 24, 2010

கணினியில் "யுனிகோட்' தமிழ் எழுத்துருவை உருவாக்கியவருக்கு மதிப்பளிக்க வேண்டும்

செம்மொழி மாநாட்டில் கணினியில் "யுனிகோட்' (ஒருங்குறி) தமிழ் எழுத்துகளை உருவாக்கிய தஞ்சையைச் சேர்ந்த உமர் தம்பியை கெüரவிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் கூறினார்.÷இது குறித்து கோவையில் அவர் நிருபர்களிடம் சனிக்கிழமை கூறியது:÷சில ஆண்டுகளுக்கு முன்புவரை கணினியில் ஆங்கிலம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. தமிழ் மொழியை இணையத்தில் படிக்க முடியாதபடி பலவிதமான தமிழ் எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இதனால் அச் சமயத்தில் தமிழ் மீது தீராத பற்றுக் கொண்ட தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த உமர் தம்பி, அனைத்துக் கணினிகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற பொதுவான தமிழ் எழுத்துருக்களை உருவாக்கினார். இதற்கு யுனிகோட் (ஒருங்குறி) எழுத்துரு என்று பெயர். இப்போது, அந்த எழுத்துகள்தான் இணையதளத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் இணையதளங்கள் "யுனிகோட்' எழுத்துருக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.÷இணையதளங்கள் எப்படி எல்லாம் தமிழை வளர்க்கின்றன என்பது குறித்து விவாதிப்பதற்காக உலகத் தமிழ்ச் செம்மொழி இணைய மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாட்டில் கணினித் தமிழை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும். இந்த மாநாட்டுக்கும், கணினித் தமிழ் வளர்ச்சிக்கும் அடிப்படையாக விளங்குவது "யுனிகோட்' தமிழ் எழுத்துருக்கள்தான்.÷இந்த எழுத்துருவை உருவாக்கிய தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உமர் தம்பி நினைத்திருந்தால், தனது கண்டுபிடிப்பை வணிகரீதியாக பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால், அவர் அவ்விதம் செய்யாமல், தமிழ் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ் யுனிகோட் தொழில்நுட்பத்தை சமுதாயத்துக்கு இலவசமாக வழங்கினார். கணினி தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட அவர் தற்போது உயிருடன் இல்லை.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவருக்கு உரிய கெüரவம் செய்யப்பட வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம்.÷செம்மொழி தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.

ajwanaina

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.