இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Thursday, March 10, 2011

குடோன்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கல்: மனித நேய மக்கள் கட்சி தலைவர் "பகீர்'

சென்னை: ""தமிழகம் முழுவதும் குடோன்களில், தி.மு.க.,வினர் பல ஆயிரம் கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளனர். இவற்றை தேர்தல் கமிஷன் கண்டறிந்து முடக்கினால் மட்டுமே இந்த தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறும்,'' என, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார்.

இது குறித்து, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியதாவது: தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரின் நடவடிக்கைகள், பேச்சுக்கள், சட்டசபை தேர்தலை நடுநிலையாக நடத்த வேண்டும் என்று அவர் விரும்புவதை காட்டுகிறது. சமீபத்தில், குண்டல்பட்டியில் கூட அதிரடி வாகன சோதனைகள் நடத்தி, பல லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றியிருக்கின்றனர்.

தேர்தலை நடுநிலையாக நடத்த, தேர்தல் அதிகாரிகளின் பேச்சுக்கள், செயல் வடிவம் பெற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள குடோன்களில், தி.மு.க.,வினர் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.

இது, மத்திய, மாநில உளவுத் துறைகளுக்கு நன்றாகவே தெரியும். இந்த பணத்தைக் கொடுத்து வாக்காளர்களைக் கவர, தி.மு.க., நினைக்கிறது. தலைமை தேர்தல் கமிஷனர் இது குறித்து அதிரடி ஆய்வு நடத்தி, குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை கைப்பற்ற வேண்டும். அப்போது தான், தேர்தல் கமிஷன் நினைக்கும் வகையில் தேர்தல் நடுநிலையாக நடக்கும். இவ்வாறு பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.