இறைவனின் திருப்பெயரால்....

Pages

Showing posts with label பள்ளிவாசலில். Show all posts
Showing posts with label பள்ளிவாசலில். Show all posts

Thursday, May 6, 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் சிக்கினர்


2007-ம்ஆண்டு அஜ்மீர் தர்கா வுக்கு அருகே உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு துறக்கும் வேளையில் குண்டுவெடித்தது. அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியானார்கள். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.


அந்த ஆண்டின் ரமலானின் கடைசி நோன்பு நாள். விடிந்தால் நோன்புப் பெருநாள் என்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த முஸ்லிம்களுக்கு மிகவும் அதிர்ச்சி யாகவும் வேதனையாகவும் மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் வண்ணமும் அன்றைய ராஜஸ்தான் மாநிலத்தை ஆண்ட பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.


முஸ்லிம்களின் இடங்களில் முஸ்லிம்களே குண்டு வைத்தார்கள்(!) எனக் கூறி தொடர் கைதுகளை நிகழ்த்தினார்கள். அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில் ராஜஸ்தான் முஸ்லிம் இளைஞர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லாமல் போனது. எண்ணற்ற முஸ்லிம் இளைஞர் களின் கைது நடவடிக்கைகளால் ராஜஸ்தான் மாநில முஸ்லிம்கள் பீதியில் உறைந்தனர்.

இந்நிலையில் அஜ்மீர் குண்டுவெடிப்பும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப் பட்டது என்ற உண்மை தற்போது வெளியாகி உள்ளது.

நடுநிலையாளர்கள், தொடக் கத்திலேயே கூறிவந்த குற்றச் சாட்டுகள் இதன்மூலம் நிரூபணமாகியுள்ளன.

அஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர் பாக தேவேந்திர தாஸ்குப்தா, சந்திரசேகர் என்ற இரண்டு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருவரை யும் ராஜஸ்தான் மாநில தீவிரவாதத் தடுப்புப்படை கைது செய்தது.

இந்த இரண்டு தீவிரவாதி கள் மட்டுமன்றி மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதி களான பெண் சாமியார் பிரக்யா சிங், மற்றும் ராணுவத்தில் இருந்து கொண்டு ஹிந்துத்துவா இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு தேசத் துரோகம் செய்த கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் என்பவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் இருப்பதால் அவர்களும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படுவார்கள் எனத் தெரிகிறது.

மொபைல் போன் சிம்கார்டை வைத்தே குண்டுவெடிப்பு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை கையும் களவுமாக (கையும் வெடிகுண்டு களுமாக?) பிடித்ததாக தீவிரவாதத் தடுப்புப் படை அறிவித்துள்ளது.

இந்த செய்தியின் மூலம் நாட்டில் நிகழும் அனைத்து கெடுதல்களுக்கும் ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் மட்டுமே காரணமாக இருந்திருக் கிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபண மாகியுள்ளது.


நாட்டில் நிகழும் அனைத்து குண்டு வெடிப்பு களுக்கும் பல்வேறு பினாமி பெயர் களில் அமைப்புகள் நடத்திவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரே காரணம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த போதிலும் கடும் நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்?


2007&ல் நடந்த அஜ்மீர் குண்டு வெடிப்பை போல் பெங்களூரு, அஹ்மதாபாத், சூரத் போன்ற இடங்களில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன.


குறிப்பாக குஜராத்தில் வானுயர்ந்த மரங்களின் உச்சியிலும், தொலைபேசி கம்பங்களின் உச்சியிலும் தீவிரவாதிகள் குண்டு வைத்ததாகவும் செய்திகள் பரவியதோடு குண்டுகள் கண்டுபிடிப் பதற்காக புறப்பட்ட குஜராத் காவல் துறையினர் சொல்லி வைத்த தைப் போல (அல்லது அவர்கள் முன்னரே வைத்ததைப் போல) மரங்களிலும் கம்பங்களிலும் ஏறி குண்டுகளை எடுத்தனர். இது அந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி காட்சியாக சர்வதேச அளவில் வர்ணிக்கப்பட்டது.


ஆனால் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கார் மாவட்டத்திலுள்ள அப்பாவி இளைஞர்கள் இருவரை கைது செய்து சித்திரவதைப்படுத்திய குஜராத் ராஜஸ்தான் அரசுகள் தற்போது உண்மை குற்றவாளிகளின் முகவிலாசம் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனைக் கதைகளை தட்டிவிட்டவர்கள், அப்பாவிகளை சிறைப்பிடித்து சித்திரவதை செய்வோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஏனெனில் இவர்கள் குற்றவாளிகளுக்கு இணையான கொடியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.