| திங்கட்கிழமை, 14, மார்ச் 2011 (8:39 IST) ஜப்பான்: 3வது அணு உலை வெடிப்பு ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இந்த சோகங்கள் நீங்காத நிலையில் இப்போது அணுக் கதிர்வீச்சு அபாயம் அந்நாட்டை சூழ்ந்துள்ளது. வடக்கு ஜப்பானின் ஃபுகிஷிமா அணு நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அணுக் கதிர் வீச்சு பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது. அணு உலையில் ஆபத்து காலத்தில் செயல்பட வேண்டிய குளிர்விப்பான் செயலிழந்ததால் அணு உலை வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள 3வது அணு உலையில் குளிர்விப்பான் செயலிழந்ததால் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே 1 வது அணு உலை வெடித்ததில் ஏற்பட்ட அணுக் கதிர் வீச்சு பரவியது. இதனால் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த அணு உலையின் மேற்கூரை மற்றும் சுற்றுச் சுவர் வெடித்தது. இந்த அணு உலையைச் சுற்றி 1.70 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| |||||||||||||||||||
Monday, March 14, 2011
ஜப்பான்: 3வது அணு உலை வெடிப்பு
Posted by
ADIRAI TMMK
at
14.3.11
Subscribe to:
Post Comments (Atom)
: Email this Article
Chennai (Madras) Time
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.