இறைவனின் திருப்பெயரால்....

Pages

Thursday, December 18, 2014

மதம் மாறுவதற்கு துணிந்த ஒரு முஸ்லிம் கிராமம் : உண்மை செய்தி...

ஒரு பொய்யான தகவல் சமூக வளை தளங்களில் பரவிவருகிறது.........
உண்மை ரிப்போர்ட் ......... திருச்சியிலிருந்து நமது செய்தியாளர் .....
... மதம் மாறுவதற்கு துணிந்த ஒரு முஸ்லிம் கிராமம் :
உண்மை செய்தி...
நேரடி ரிப்போர்ட்...
திருச்சியில்
மதம் மாறுவதற்கு துணிந்த ஒரு முஸ்லிம் கிராமம்: அதிர்ச்சி ரிப்போர்ட்... என்ற பெயரில் இலங்கையிலிருந்து ஒரு இணையதளம் மூலம் ஒரு பொய்யான தகவல் சமூக வலைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த கட்டுரையில் ஓரளவு உண்மை இருந்தாலும் அதில் கூறப்பட்டிருக்கும் மதம் மாற துணிந்த முஸ்லிம்கள் என்பது முற்றிலும் தவறானது.இந்த கட்டுரையை சமூக வலைய தளங்களில் பார்த்த தமுமுக மாநில தலைவர் ரிஃபாயி அவர்கள்,தமுமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா அவர்களிடம் தொலைபேசியில் பேசி இது சம்மந்தமாக உடனே விசாரித்து தகவல் கொடுக்கும்மாறு கூறியிருந்தார்கள்.அதன் அடிப்படையிலும் பல்வேறு ஊர்களை சேர்ந்த சகோதரர்களும்,வெளிநாடுகளில் வாழும் நம் சகோதரர்களும் இது பற்றி கேட்டனர்.சமயபுரம் அருகே உள்ள சோழை மொழி நகர் என்ற கிராமத்திற்கு இன்று 16.12.2014 செவ்வாய் கிழமை நேரடியாக சென்று விசாரித்ததில்...
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள இருங்கலூர் ஊராட்சிக்கு உட்பட சோழை மொழி நகர்,முல்லை நகர்,காந்தி நகர் என்கிற பகுதியில்சுமார் 35 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.இவர்கள் ஏற்கனவே கொள்ளிடம் அருகில் சாலையோரத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தார்கள்.
இவர்கள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து பிழைப்புக்காக இங்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.கொள்ளிடம் பகுதியில் சாலை அகலப்படுத்துவதால் இவர்களுக்கு மாற்று இடமாக திருச்சி சமயபுரம் அருகே உள்ள இருங்கலூர் ஊராட்சிக்குட்ட இடத்தில் குடிசை அமைத்து இருந்து கொள்ளுங்கள் என்றும்,பிறகு அவர்களுக்கு அந்த இடத்திற்கு பட்டாவும் வழங்கியுள்ளார்கள் அதிகாரிகள்.அதுமட்டும்மல்லாமல் கோவிலுக்கும்,பள்ளி வாசலும் இடமும் ஒதுக்கி கொடுத்துள்ளார்கள்.
அரசால் கொடுத்த இடம் தான் அங்கு பள்ளி அமைந்திருக்கும்4 சென்ட் இடம்.அரசே அவர்களுக்கு இடம் கொடுத்துள்ளதால்இவர்கள் வீடு கட்டி தருவதற்காக மதம் மாற துணிந்தார்கள் என்பது முற்றிலும் தவறானது.இங்கு வசித்து வரும் மக்கள் பீடி தொழில்,பெயின்டிங் மற்றும் கட்டிட தொழில் செய்து வருகிறார்கள்.
இவர்கள் இதற்கு முன்னர் பல்வேறு ஊர்களில் இருந்து பிழைப்பிற்காக திருச்சி வந்த மக்கள் ஒரு மஹல்லாவிற்கு உட்பட்ட இடத்தில் தங்காமல் மாற்று மதத்தினர் இருக்கும் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
இதனால் இவர்களுக்கு மார்க்கம் சம்மந்தமான எவ்வித விசயங்களும் தெரியாமல் அவர்களுடன் நேர்த்திகடன் செலுத்த கோவில் போன்ற இடங்களுக்கு செல்லும் அவல நிலையில் இருந்துள்ள நிலையில் தான் இவர்களுக்கு சோழை மொழி நகர் பகுதயில் இவர்களுக்கு இடம் கொடுத்து வழிபாடு நடத்த பள்ளி வாசலுக்கும் இடம் ஒதுக்கப்பட்டும்இருந்தது.அப்போது பாபு என்பவர் தான் முதன் முதலில் அங்கு குடிசையாக அமைக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு தலைவராக செயல்பட்டு வந்தார். இருந்தும் அவர்கள் சரியாக மார்க்க விசயங்களில் ஈடுபாடு இல்லாமல் தான் இருந்து வந்தார்கள். இதனிடையேஒரு ரமலான் மாத்தில் தராவிஹ் தொழுகை நடத்துவதற்காக அல்ஹாபிஸ் மெளலவி. அப்துல் கரீம் (ரஹீமி) என்பவர் ஒரு நண்பர் மூலம் அழைக்கப்பட்டார்.இவர் கொழும்பு இஹ்ஸானியா அரபுக் கல்லூரியில் பட்டம்பெற்றவர்.இவர் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் உள்ள ஒரு மதரஸாவில் இரண்டு வருட மார்க்க கல்வியும் பயினறுள்ளார். சோழை மொழிநகருக்கு தராவிஹ் தொழ வைக்க வந்த இவர் இவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியும் மார்க்க கடமைகள் பற்றியும் தொழுகை, நோன்பை பற்றியெல்லாம் தெரியாமல் இருந்ததை பார்த்த இவர் இம்மக்களுக்கு மார்க்க கடமைகளை கற்றுக்கொடுக்க இங்கே தங்கியது. மார்க்கத்திற்காக இவர் செய்த தியாகம் நம்மை மெய் சிலிற்க்க வைக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்...இப்பள்ளிவாசலில்இமாமாக பணியாற்றிவரும் அப்துல் கரீம் மெளலவிக்கு 300 ரூபாய் மாத்திரமே சம்பளமாக வழங்கப்பட்டது. அதும் சிறிது காலத்திற்கு பிறகு தர முடியாத சூழ்நிலையில் இவரே சமயபுரத்திற்கு அருகே உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து பள்ளியில் இமாமத் செய்தும் அப்பகுதி குழந்தைகளுக்கு மதரஸா வகுப்புகளும் நடத்தி வருகிறார்.
இவரின் செயலை பார்த்த தமுமுக திருச்சி வடக்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மாலிக் அவர்கள் இவருக்கு கருவாடு விற்கும் தொழில் செய்யவும் உதவி உள்ளார்.இந்த ஊரை பற்றி கேள்விபட்ட ஐக்கிய நலக் கூட்டமைப்பு (United Welfare Organization - UNWO) சோழமொழி கிராமத்துக்குச்சென்று குடிசை ஒன்றில் பள்ளிவாசலை நிறுவியது. பிலால் ஜும்ஆ மஸ்ஜித் என்ற பெயரில்நிறுவப்பட்ட அப்பள்ளிவாசலில்ஐந்நேரத் தொழுகைகள், வாரம் இருமுறை மார்க்க சொற்பொழிவுகள்என்பன நடைபெற்றன. உடனடியாக அங்கு பள்ளிவாசல் கட்டுவதற்கு அல்ஹரைமன் நிதியம் பொறுப்பேற்றுக்கொண்டது. தற்போது அந்த பள்ளிவாசல் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஆனால்,அல்ஹரைமன் அமைப்பு பள்ளிவாசலை மட்டுமே கட்டிக் கொடுத்தது. பள்ளிவாசலைச் சுற்றி மதில், ஒளு செய்வதற்கான இடம், கழிப்பிட வசதிகள் மற்றும் இமாம் தங்குவதற்கான வசதிகள் போன்றவை செய்து கொடுக்கப்படவில்லை. இதனை சோழமொழி மக்களே செய்யவேண்டுமென குறித்த அமைப்பு கூறியுள்ளது.இந்நிலையில் மலேசிய பத்திரிக்கை ஒன்றில் நிருபராக இருந்து வரும் திருச்சி புத்தாநத்ததை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் இப்பகுதி மக்களை பற்றி அறிந்து சேழை மொழி நகருக்கு சொன்று பள்ளிவாசலின் தற்போதைய தலைவர் ஹைதர் அலி அவர்களையும்,பள்ளி இமாமையும் சந்திக்கிறார். பிறகு இதை பற்றி தனக்கு தெரிந்தவர்களிடம் கூறியுள்ளார். இந்நிலைமையை அறிந்தவுடன் நல்லுள்ளம் படைத்த ஒருசிலர் பொருளாகவும், பணமாகவும் உதவி செய்தனர்.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியிலுள்ள கைக்கூலி கைவிட்டோர் கழகம், இளம் அரிமா சங்கம் (லியோ கிளப்), ரோட்ராக்ட் கிளப் ஆகிய அமைப்பிலுள்ள மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு பள்ளிவாசலுக்குச் சென்று இந்தப் பள்ளியின் கட்டிட நிதிக்காக வசூல் செய்து அந்த பணியும் முடிவுறும் நிலையில் இன்னும் பள்ளிக்கு மோட்டார்,எலக்ட்ரிக் பொருட்கள் தேவையான நிலையில் உள்ளார்கள்.
இன்ஷாஅல்லாஹ்...வருகின்ற... 18.12.2014 வியாழக்கிழமை அன்று பள்ளி திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிலையில் மலேசிய பத்திரிக்கை நிருபர் சாகுல் ஹமீது அவர்கள் கடந்த வாரம் இலங்கை மற்றும் மலேசியா சென்றுள்ளார்.
இலங்கைக்கு சென்றிருந்த போது நல்ல நோக்கத்தோடு அப்பகுதி மக்களுக்கு உதவி கிடைக்கு என்ற எண்ணத்தில் அச்செய்தியை பகிர்ந்துள்ளார்.
இதை கேட்ட இலங்கையை சேர்ந்த யாரோ ஒருவர் தன் நாட்டை சோர்ந்த நபரை பெருமைபடுத்தும்நோக்கில் இல்லாத ஒரு விசயத்தை அதாவது மதம் மாறுவதற்கு துணிந்த ஒரு முஸ்லிம் கிராமம் என்ற தலைப்பில் செய்தியை சமூக வலையதளங்களில் பரப்பி உள்ளார்... இது மிகவும் கண்டிக்கதக்கது... உன்மையை அறியாமல் பலரும் பலவிதமான பித்னாக்களோடு இச்செய்தியை பரப்பி வருகிறார்கள்...
அம்மக்களுக்கு ஒரு போதும் மதம் மாறும் எண்ணம் இல்லை என உறுதியுடன்கூறியுள்ளார்கள். வலையதள செய்தியைகேள்வி பட்டு அப்பகுதி மக்கள் சிலர் பள்ளி இமாமை ஏன் எங்கள் ஊரை பற்றி தவறான கருத்தை வெளிவிட்டீர்கள்என்று அடிக்க முற்பட்டுள்ளனர். இமாம் அவர்கள் உண்மை நிலையை எடுத்து கூறி சமாதானம் செய்துள்ளார்.பிறகு அவ்வூர் மக்கள் சாகுல் ஹமீது அவர்களை தொடர்பு கொண்டு பேசியதற்கு அவர் உங்கள் ஊருக்கு நன்மை கிடைக்க வேண்டும் என எண்ணி தான் செய்தியை வெளியிட்டேன். ஆனால்யாரோ இதை தவறாக பரப்பிவிட்டதாக அம்மகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.அம்மக்கள் தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அம்மக்களுக்காக எல்லாத்தையும் தியாகம் செய்த இமாம் அவர்களுக்காகவும் துஆ செய்வோம்...பள்ளிவாசலின் ஏனைய பணிகளைச் செய்வதற்கு நம்மால் இயன்ற உதவிகளை தாரளமாக வழங்குவோம்.
இன்ஷாஅல்லாஹ்...-
திருச்சியிலிருந்து பெரோஸ்கான்...

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.