இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link
A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Saturday, September 10, 2011

அதிரையில் நல்லிணக்கத்திற்கான நற்சேவை


அதிரையில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் நடத்தும் சமுக நல்லிணக்க பொதுக் கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா இன்ஷாஅல்லாஹ் நாளைய தினம் (11-09-2011) மாலை 05:00 நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை நமது அதிரை பிபிசி நேரலை செய்யும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.



"படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பமாகும்" எனும் நபிமொழிக்கிணங்க. சாதி, மதம், இனம், குலம் போன்ற பாகுபாடுகள் பார்க்காமல், பாதிப்பிற்குள்ளானவர் யாராயிருந்தாலும், அவசர உதவி தேவைப்படுவோர் எவராயிருந்தாலும், அவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவி கிடைக்க வேண்டும் என்பது சமூக நலம் விரும்புவோரின் எதிர்பார்ப்பாகும்; நம் இந்திய அரசுச் சாசனமும் அதைத்தான் கூறுகின்றது. எனவே, ஜனநாயக அடிப்படையிலும் இச்சேவையானது பாராட்டத் தக்கதும் வரவேற்கத் தக்கதுமாகும்.

அதிரையின் மக்கள் தொகை, வசதி வாய்ப்புகள், தேவைகள் ஆகியவற்றைக் கருத்துள் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன் நம் சமுதாய அமைப்புகளுள் ஒன்றான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிரைக் கிளை நமதூருக்கு ஓர் மருத்துவம் மற்றும் துயர்துடைப்பு அவசர வாகனத்தின் தேவையை உணர்ந்து, அதற்கான நன்முயற்சிகளில் முனைந்து பாடுபட்டு வந்தது.

இவ்வாகனத்தின் தேவை உணரப்பட்டபோது, இதன் விலை ஆறு லட்சமாக இருந்தது. ஆனால், அது கைக்கு வந்து கிடைத்து வாங்கியபோது, சுமார் ஒன்பது லட்சமாக உயர்ந்துவிட்டது. எனினும், நம் சமூக ஆர்வம் மிக்க (குறிப்பாக வெளிநாடுவாழ்) சகோதரர்களின் ஒத்துழைப்பினால், அத்தொகையைக் கொடுத்து இவ்வாகனம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்!

அதன் சமுதாய அர்ப்பணிப்பு விழா, எதிர்வரும் 11 – 09 – 2011 ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்து மணியளவில் நமதூர் பேருந்து நிலையத்தின் அருகில் நடைபெற இருக்கின்றது. அவ்வமயம், த. மு. மு. க. மற்றும் ம.ம.க. மாநிலத் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைகளும் பாராட்டுரைகளும் சமூக விழிப்புணர்வு உரைகளும் நிகழ்த்துவார்கள்.

கலந்துகொள்வோர்:

பேராசிரியர் டாக்டர் M.H. ஜவாஹிருல்லாஹ், MBA, MLA
S. ஹைதர் அலி (த.மு.மு.க. பொதுச் செயலாளர்)
M. தமீமுன் அன்சாரி M.A. (ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர்)
பேராசிரியர் J. ஹாஜா கனி M.A. (த.மு.மு.க. மாநிலச் செயலாளர்)

அதிரை த.மு.மு.க. அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.

- அதிரை அஹ்மது
குறிப்பு : இன்ஷாஅல்லாஹ் இந்நிகழ்ச்சி அதிரைபிபிசி மற்றும் தமுமுக இணையதளத்தில்
நேரலை செய்யப்படும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.