இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link
A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Monday, March 21, 2011

வட மாவட்டங்களில் எதிர்க்கட்சியினர் எவரும் வெற்றி பெற முடியாது : ராமதாஸ்

வட மாவட்டங்களில் எதிர்க்கட்சியினர் எவரும் வெற்றி பெற முடியாது : ராமதாஸ்
 
ஆல்பம்

திருப்போரூர் : ""வட மாவட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

திருப்போரூர் தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: வட மாவட்டங்கள் எனக் கூறப்படும் 12 மாவட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. கிராமத்திலிருப்போர் அந்த ஊர்களில் பணியாற்ற வேண்டும். தி.மு.க., அரசு என்ன செய்தது என, எதிர்க்கட்சியினர் கேட்பர். ஒரு ரூபாய் அரிசி மூலம் பசிப் பிணியை நீக்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை செயல்படுத்தியதால் பொதுமக்கள் அனைவரும் பயனடைந்துள்ளனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்போருக்கு 35 கிலோ அரிசி வழங்குவதாக முதல்வர், தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை அனைவரிடத்திலும் எடுத்துச் சொல்ல வேண்டும்.கலைஞர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம், ஸ்ரீரங்கத்தில் பயன்பெற்ற ஒருவர், நாங்கள் இதுவரை அ.தி.மு.க.,விற்கு தான் ஓட்டு போட்டுள்ளோம். இம்முறை எங்கள் குடும்பத்தில் உள்ள பத்து ஓட்டுகளையும் தி.மு.க.,விற்கே போடுவோம் என்றார். கொத்து கொத்தாக ஓட்டுகள் விழ வேண்டும். அதற்கேற்ப ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குழுவை ஏற்றபடுத்துங்கள். அந்தக் குழுவே எல்லா வேலைகளையும், பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டும். நமக்கு எதிரணி இருக்கு என்று கவலைப்பட வேண்டியதில்லை. மிகப் பலமான அணி நம்முடைய அணிதான். கருணாநிதி ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார் என, மக்களே சொல்லும் நிலை உள்ளது.

பா.ம.க.,வுடன் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்திருப்பதால், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 வட மாவட்டங்களில் எதிரணியினர் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது. களப்பணியாளர்கள் 20 பேர் தினமும் மக்களை சென்று பார்க்க வேண்டும். முதல் முறையாக இம்மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளேன். மூன்றாவது முறையாக போட்டியிடும் ஆறுமுகம் 25 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார். கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் பத்து பேரும், ராமதாசுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.