
இதனால் அறியப்படும் நீதி : டிரைவர் சாப்பிட்டாரா என்று விசாரித்துவிட்டு ஏறுவது நலம்.. அதுலகூட அன்லிமிடெட் மீல்ஸ் அடிப்பவரென்றால் தூங்கிவிட்டு எல்லோரையும் மொத்தமாக 'வழியனுப்பிவிடும் 'அபாயமும் இருக்கிறது..
______________________________________
ரேஷன் கார்டு சம்பந்தமாக தாலுக்கா அலுவலகத்திற்கு போனபோது லேசான தூறல் போட்டது.பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே போனேன் 'லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற எழுத்தை விட போர்டு அநியாயத்திற்கு மங்கி போயிருந்தது எழுத்திலுள்ள வாசகத்தை மங்க விடாம பார்த்து கொண்டாலே போதும்.வெளியே தூறல் போட்ட விஷயம் உள்ளே போனதும்தான் தெரிந்தது பத்து மணிக்கெல்லாம் முடிந்தளவு எல்லா அலுவலர்களும் வந்திருந்தார்கள் வழக்கமான இழுத்தடிப்புகள் இல்லாமல் சீக்கிரமாகவே எனக்கு வேலை முடிந்தது..உஜாலாவுக்கு மாறின மாதிரி ஏன் இப்படி இங்கு திடீர் மாற்றம்'னு நான் சொல்லமாட்டேன்.. தேர்தல் வருதல் அதனால் வந்த மாறுதல்..
___________________________________
அரசுடையாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை காலை பத்தரை மணிக்கு போனேன் வாசலில் உள்ள செக்யூரிட்டி பேங்க் உள் கேட்டில் நின்றுகொண்டு எவரையும் உள்ளே விட மறுத்தார் ஏன்'னு கேட்டால் வங்கியில் ஒரே ஒரு அலுவலர் மட்டும் இருக்கிறார் மற்ற நாலு பேர் ஒரு கல்யாணத்திற்க்கு?? போயிருக்கிறார்கள் என்றார்..அப்படியே அசந்து போயிட்டேன் அதெப்படி வேலை நேரத்தில் அவர்கள் போவார்கள் என்று ஒருவர் ஏகத்துக்கும் கொந்தளித்துக் கொண்டிருக்க தேய்ந்த ரெக்கார்ட் போல் அதையே திரும்ப அவருக்கு சொல்லிக்கொண்டிருந்தார் செக்யூரிட்டி. மணியும் 12 ஆக பேங்க் டைம் முடிந்துவிட்டு என்று கேட்டை இழுத்து மூடிவிட்டார்கள்..கொந்தளித்த மனிதர் பக்கத்தில் இருந்த சர்பத் கடையில் நன்னாரியை வாங்கி குடித்து தன்னைதானே சாந்தப்படத்தி கொண்டார்..கிழமை வேற சனி'யாகி இருந்தது எவ்ளோதான் திங் பண்ணாலும் திங்கள்கிழமைதான் வேலை முடிந்தது..
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.