தேமுதிக-இடதுசாரிகள் 3வது அணி மிரட்டல்: அதிமுகவிடம் சாதகமான சீட்களைப் பெற 'நாடகம்'?

இந்த நெருக்குதலுக்கு ஜெயலலிதா

தனி அணி அமைத்தால் வைகோவை உடன் சேர்த்துக் கொள்வது என்ற முடிவிலும் இவர்கள் உள்ளனர். அதிமுகவுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டால் வைகோவை இவர்கள் மறந்துவிடுவர். அதாவது, ஜெயலலிதாவைப் போலவே, இவர்களும் வைகோவை ஒரு ஊறுகாய் போல பார்க்கிறார்கள் என்பதே உண்மை.
திடீரென நேற்று இரவு 160 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக. அதில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம்

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்

அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் டாக்டர் சேதுராமன், பார்வர்ட் பிளாக் தலைவர் பா.கதிரவன் ஆகியோர் சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் இவர்கள் அனைவரும் தேமுதிக அலுவலகத்துக்குச் சென்று விஜய்காந்துடன் ஆலோசனை நடத்தினர். அப்போதும் இவர்களால் ஒரு திடமான முடிவுக்கு வர முடியவில்லை என்று தெரிகிறது.
அதேசமயம், இந்த தலைவர்களின் இந்த திடீர் கூட்டம், பரபரப்பு பேச்சு, அங்கும் இங்கும் விரைந்தது ஆகியவையெல்லாம் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு நெருக்கினால், 3வது அணி அமைப்போம் என்று சாடை மாடையாக கூறினால், அதிமுக இறங்கி வரும் கேட்ட தொகுதிகளைக் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் இந்தத் தலைவர்கள் இவ்வாறு ஓடியாடி வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக பணியாவிட்டால் 3வது அணி அமைப்பது அப்போது வைகோவையும் உடன் சேர்த்துக் கொள்வது, ஜெயலலிதா இறங்கி வருவதாக தெரிந்தால் 3வது அணியை கிடப்பில் போட்டு விடுவது, வைகோவையும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது என்ற ஐடியாவில் இவர்கள் இருப்பதாகவும் தெரிகிறது.
English summary
CPM. CPI, FB, MMM and PT hold discussion about forming 3rd front. All the alliance parties of ADMK are upset over ADMK's candidates list. So they are discussing the chances for forming a third front
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.