இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, July 27, 2010

திருத்துறைப்பூண்டி பா.ஜனதா கூட்டத்தில் மோதல்; ஆம்புலன்ஸ் டிரைவர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டியில் நேற்று பாரதீய ஜனதா சார்பில் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.


அப்போது அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வேகமாக வந்தது. உடனே அந்த ஆம்புலன்சுக்கு தொண்டர்களை வழிவிடும்படி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். தொண்டர்களும் ஆம்புலன்சுக்கு வழி விட்டனர்.


ஆனால் அந்த ஆம்புலன்சில் நோயாளிகள் யாரும் இல்லை. தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் பெயர் எழுதப்பட்டு இருந்த அந்த ஆம்புலன்சை பாரதீய ஜனதா தொண்டர்கள் மறித்து டிரைவர் ஜாகிர் உசேனிடம் தகராறில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமரசப்படுத்தி ஆம்புலன்சை அனுப்பி வைத்தனர்.


இந்த நிலையில் போலீசார்- பா.ஜனதாவினர் இடையே கை கலப்பு ஏற்பட்டது. மன்னார்குடி டி.எஸ்.பி. கார் கல் வீசி உடைக்கப்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி பா.ஜனதா தொண்டர்களை கலைத்தனர். இதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அந்த ஆம்புலன்சும் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது.


இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


இதற்கிடையில் அலிவலம் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி முத்து திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில் பாரதீய ஜனதா கூட்டத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஜாகிர்உசேன் ஆம்புலன்சுடன் அத்துமீறி நுழைந்ததாக கூறினார். இதைத் தொடர்ந்து ஜாகிர் உசேன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


இதேபோல் தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழக மாவட்ட தலைவர் தாஜுதீனும் பாரதீய ஜனதா கட்சியினர் மீது புகார் கூறி உள்ளார்.

நன்றி : மாலைமலர்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.